முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வந்த மூதாட்டியை தரையில் கிடத்திய விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு, அவரது வீட்டில் வழுக்கி விழுந்த விபத்தில் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். அவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டம் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுதொடர்பாக அந்த மூதாட்டியின் உறவினர்கள் விசாரித்த போது, சம்பந்தப்பட்டவர் நேரில் வரவேண்டும் என கூறியுள்ளனர். பின்னர் அங்கு நேரில் சென்ற அம்மூதாட்டியை தரையில் கிடத்தி காப்பீடு திட்டத்துக்கு புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோஹினிக்கு தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக சம்பந்தப்பட்ட 2 பேரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


