

வைணவ சமய மகான்களில் ஒருவரான சுவாமி வேதாந்த தேசிகரின் 750-ஆவது ஜயந்தி விழா நிகழ்ச்சிகள், திருவள்ளூர் வைத்திய வீரராகவர் திருக்கோயிலில் உள்ள அஹோபில மடத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
சுவாமி வேதாந்த தேசிகரின் 750-ஆவது ஜயந்தி விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அஹோபில மடத்தின் 46-ஆவது ஜீயரான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மகா தேசிகன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, வீரராகவர் கோயில் வளாகத்தில் உள்ள அஹோபில மடத்தில் வேதாந்த தேசிகரின் ஜயந்தி விழா நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கின.
இதில் அஹோபில மடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமி தலைமையில் பக்தர்கள் பாராயணம் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, முதன் முறையாக வீரராகவ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீபாதுகா சஹஸ்ர மஹோத்சவம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 13) நடைபெற இருக்கிறது. இதில் அஹோபில மடம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் தலைமையில், மலோல வித்வத் சபாவின் அறிஞர்கள் பலரும் பங்கேற்க உள்ளதாக அஹோபில மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.