ரஜினி, கமல் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்: நடிகை நக்மா

ரஜினி, கமல் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மா தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்: நடிகை நக்மா
Updated on
1 min read

ரஜினி, கமல் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் கூறியதாவது, 
நடிகர்கள் ரஜினி, கமல் நல்ல இயக்கத்துடன் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ரஜினி, கமல் போன்றவர்கள் விதி விலக்கு அல்ல. 

மத்திய அரசிடம் இணக்கமாக செயல்பட்ட போதிலும் தமிழகத்துக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் பெரும்பான்மையான துறைகள் தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுத்தால், அவருடன் கூட்டணி அமைக்க மாட்டேன்'' என்று நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com