விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, நாகையில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாணவரணி சார்பிலும், திருவாரூரில் அனைத்துக் கட்சி மாணவர்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:49 pm

DIN

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, நாகையில் ஜனநாயக உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாணவரணி சார்பிலும், திருவாரூரில் அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பு சார்பிலும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், இதுகுறித்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில்... நாகை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மண்டல மாணவரணி செயலாளர் நாத்திகபொன்முடி தலைமை வகித்தார். 
திராவிடர் கழகம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பல்வேறு மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திருவாரூரில்... அனைத்துக் கட்சி மாணவர் அமைப்பு சார்பில், திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் மாணவரணி அமைப்பாளர் ச. திலீபன் தலைமை வகித்தார்.
கோரிக்கையை விளக்கி தலைமைக் கழகப் பேச்சாளர் வி. திராவிடன் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.