6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன்: கமல்ஹாசன்

அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 6:39 am

DIN

அடுத்த மாத மத்தியில் அடுத்தகட்ட பயணம் மேற்கொள்வேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெயரை மதுரையில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். மேலும் அக்கட்சியின் கொடியையும் நற்பணி இயக்கத்தினர் முன்னிலையில் அவர் ஏற்றினார். அக்கொடியில் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஆறு கைகள் இணைந்தபடியும், நடுவில் நட்சத்திரம் ஒன்றும் இருந்தது. 

இதுகுறித்து கமல்ஹாசன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 
எனது கட்சியில் திராவிடத்தையும் இழக்கவில்லை, தேசியத்தையும் இழக்கவில்லை. ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை. நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை பார்க்க வந்த கூட்டம் அல்ல. கட்சியின் பெயர் மற்றும் லோகோ என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு?. 

மக்கள் நீதி மய்யத்தில் நிறுவனத்தலைவர் என்ற ஒரு பொறுப்பு உருவாக்கப்படும். அரசு ஒத்துழைக்காவிட்டாலும் தத்தெடுக்கும் கிராமங்கள் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாத மத்தியில் அடுத்த கட்ட பயணம் மேற்கொள்வேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.