தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

'ஆன்மீக அரசியல்' என்றால் என்ன? ரஜினி புது விளக்கம்! 

தான் குறிப்பிட்ட 'ஆன்மீக அரசியல்' என்றால் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினி புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2018, 10:54 am

சென்னை: தான் குறிப்பிட்ட 'ஆன்மீக அரசியல்' என்றால் என்ன என்பது குறித்து நடிகர் ரஜினி புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று தன்னுடைய ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியின் பொழுது தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவித்தார். அப்பொழுது அவர் தன்னுடைய அரசியல் 'ஆன்மீக அரசியல்' என்று அறிவித்தார். அப்பொழுது துவங்கி ரஜினி குறிப்பிடும் 'ஆன்மீக அரசியல்' என்ன என்பது குறித்து சமூக வலைத்தளங்கள் துவங்கி வித விதமான விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் செவ்வாயன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே செல்லும் பொழுது அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்.

ஆன்மீக அரசியல் என்பது ஆத்மாவுடன் தொடர்புடைய ஒன்றாகும்.

கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி தொடர்பான விபரங்கள் பற்றி போக போகத் தெரியும்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.