எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்னும் ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்: சொல்வது எந்த நடிகர் தெரியுமா? 

இன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

News image
Updated On :8 ஜனவரி 2018, 9:59 am

DIN

மதுரை: இன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது ஒன்றும் புதிதான விஷயமல்ல. மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். உடல்நலம் குன்றி எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்காக பாக்யராஜ் பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆராலேயே தனது 'அரசியல் வாரிசு'  என்று அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.  

எம்ஜிஆரின் இறந்த பின்னர் ஜானகி அணியை அவர் ஆதரித்தார். அதன் பின்னர், அவரே தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் நீண்ட காலம் அமைதியாக இருந்த அவர் பிறகு திமுகவில் சேர்ந்து அந்தக் கட்சிக்காகவும்  பிரச்சாரம் செய்தார்.

தற்பொழுது ஜெயலலிதா மரணம் மற்றும் கலைஞரின் செயல்படாத் தன்மை காரணமாக உருவான அரசியல் வெற்றிடம் காரணமாக   கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தங்களது அரசியல் வருகை குறித்து வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்னும் ஒருமாதத்தில் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:

அரசியலுக்கு நேரடியாக வரக்கூடிய வாய்ப்பும் காலமும் நெருங்கிவிட்டது. அந்தச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. கிட்டத்தட்ட, நேரடி அரசியல் குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். அதற்கான காலம், நீண்டகாலம் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இன்னும் ஒருமாதத்திற்குள் முடிவைச் சொல்லுவேன்.  யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என்றெல்லாம் அப்போது தெரியும். கொஞ்சம் பொறுத்திருங்கள்''

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.