
சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வியாழன் அன்று வீட்டுவசதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பினை முதல்வர் பழனிசாமி வாசித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளது.
இந்த துணைக்கோள் நகரமானது மத்தியப் பூங்கா, கூட்ட அரங்குகள் உள்ளிட்ட எல்லா வசதிகளும் கொண்டதாக அமையும்.
இந்த நகரத்திற்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் நவீன வசதிகள் கொண்டதாக உருவாக்கப்படும்.
துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி விட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.