தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு 

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :6 ஜூலை 2018, 8:19 am

DIN

சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்திற்க்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தாக்கம் சமீப காலங்களில் வலுப்பெற்று வருகிறது. பிரதமர் மோடி கூட இதனை வலியுறுத்தி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற அர்த்தத்தில் பேசி இருக்கிறார். இதன்மூலம் நேரம் மற்றும் பணம் மிச்சமாகவும் என்ற கருத்தும் பலராலும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தேசிய சட்ட ஆணையமானது பல்வேறு அரசியல் கட்சிகளுடன் நடத்தவுள்ள இரண்டு நாள் ஆலோசனை கூட்டமானது சனிக்கிழமையன்று தில்லியில் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அதன் ஆட்சிக் காலம் பூர்த்தியாகும் முன்பே கலைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்த இயலும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் இரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.