தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சிக்குள்பட்ட அ. குமரெட்டியாபுரம், டி. குமாரகிரி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தீரியிடம் அளித்த மனு விவரம்:
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அருகில்தான் எங்களது கிராமம் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை வந்த பிறகு பலரும் பாதிப்பு எனக் கூறிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், அப்படி எந்தப் பாதிப்பும் எங்களுக்கு இதுவரை இல்லை.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் பெற்றுக் கொடுத்தது. எங்கள் மக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகளைச் செய்து தந்தது. குழந்தைகளுக்கு கல்வி உதவி என பல்வேறு உதவிகளை எல்லாம் செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில், சில அந்நிய சக்திகளின் தூண்டுதலால் நடைபெற்ற போராட்டத்தால் அப்பாவி மக்கள் உயிர் இழந்துவிட்டனர்.
இதனால், தமிழக அரசும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிவிட்டது. தொழிற்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் நாங்கள் அனைவரும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். சிலரது போராட்டத்தால் எங்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளாகத் தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம். எனவே, பாதிப்பு இல்லாத ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரி உரிமையாளர்கள் மனு: தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திடீரென்று மூடிவிட்டது. அரசின் இந்த திடீர் முடிவால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தினமும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு தாமிரத் தாது, ராக்பாஸ்பேட் என பல்வேறு பொருள்களை ஏற்றி, இறக்கும் பணியை செய்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் தொழில் இல்லாமல் முடங்கியுள்ளன. எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் மீண்டும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

