
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக விசாரணை ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுப்பப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையின் ஆவணப் பிரிவு மேலாளர் கோவிந்தராஜன் செவ்வாயன்று ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அப்பல்லோ ஆவணங்களில் குளறுபடி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016, செப்டம்பர் 23 முதல் இறுதியாக டிசம்பர் 5 -ஆம் தேதி வரை ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அத்துடன் சில ஆவணங்கள் பின்னர் தனியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலானது சிகிச்சையின் உண்மைத் தன்மை குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.