சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

பி.இ. கலந்தாய்வு: முன்வைப்புத் தொகை செலுத்த இன்று கடைசி

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க உள்ள மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.

Updated On :24 ஜூலை 2018, 1:28 am IST

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க உள்ள மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
கலந்தாய்வு முதல் சுற்றில் பங்கேற்க இதுவரை 6,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தியுள்ளனர்.
இன்று நள்ளிரவு வரை... பி.இ. ஆன்லைன் முதல் சுற்றில் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை முன்வைப்புத் தொகையைச் செலுத்தலாம்; முன்வைப்புத் தொகைக்கான வரைவோலையாகச் செலுத்த விரும்புவோர், உதவி மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் செல்ல வேண்டும். முன்வைப்புத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.