வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

போராட்டத்தில் பங்கேற்பது குறித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முடிவு

டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ஆவது நாளாக திங்கள்கிழமை லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும்

News image
Updated On :24 ஜூலை 2018, 1:34 am IST

டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ஆவது நாளாக திங்கள்கிழமை லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், இப்போராட்டத்தில் பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கவுள்ளனர்.
லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் 4-ஆவது நாளாக தொடரும் நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேங்கத் தொடங்கியுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, 3 -ஆம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. இப்போராட்டம் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
கடந்த 4 தினங்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சரக்கு லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய லாரிகள் சரக்குகளை ஏற்றாமல் காலி வாகனங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளின் வர்த்தகம் முடங்கியுள்ளன.
மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக திங்கள்கிழமை உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் டேங்கர் லாரிகளும் பங்கேற்பது குறித்து செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியது: தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் 8 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இப்போராட்டத்தில் நாங்கள் பங்கேற்பது குறித்த முடிவு செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.