தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வெளிநாட்டில் இருப்பதால் வர முடியவில்லை: பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா விடியோ வெளியிட்டுள்ளார்.

News image

இயக்குநர் கே. பாக்யராஜ், இளையராஜா.

Updated On :27 ஜூன் 2026, 6:37 pm IST

பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா விடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். நான் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் உடனடியாக சென்று பார்க்கவோ இரங்கல் செய்தியை குடும்பத்தாருக்கு தெரிக்கவோ இயலாத நிலையில் இருக்கிறேன். என்னுடன் ஆரம்ப காலத்தில் மிகவும் நெருங்கி பழகிய பாக்யராஜ் மறைவைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

இந்தியாவிலேயே ஆகச்சிறந்த திரைக்கதை வசன கர்த்தாவாக பாக்யராஜ் திகழ்ந்தார். அவரின் திடீர் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இயக்குநர் பாக்யராஜை இழந்து வாடும் அவரது மனைவி பூர்ணிமா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ரஜினி, கமல் உட்பட ஏராளமான திரையுலகினரும் மக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பாக்யராஜ் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Summary

Isaignani Ilaiyaraaja has released a video expressing his condolences over the demise of Bhagyaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.