/

பாக்யராஜிடமிருந்து இளையராஜா கற்றுக்கொண்ட பாடம்!

பாக்யராஜ் குறித்து இளையராஜா பேசியது...

News image

இயக்குநர் பாக்யராஜ், இசையமைப்பாளர் இளையராஜா

Updated On :27 ஜூன் 2026, 3:47 pm IST

இயக்குநர் பாக்யராஜிடமிருந்து தான் கற்றுக்கொண்டதை இசைமைப்பாளர் இளையராஜா கூறியிருந்தார்.

இயக்குநர் பாக்யராஜின் மறைவு திரைத்துறையினரிடம் பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்பு மகள் திருமணத்திற்கு கோவா சென்றுவிட்டு சென்னை திரும்பியவர் திடீரென உயிரிழந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

இந்த சூழலில் பாக்யராஜ் இயக்கிய, நடித்த திரைப்படங்கள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பாக்யராஜுக்காக பேசிய பழைய காணொலிகளும் வைரலாகி வருகின்றன.

அப்படி, சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாக்யராஜுக்கு சிறப்பு விழா எடுக்கப்பட்டிருந்தது. அதில், கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, “முதல் பட இயக்குநர்களின் கதைகளைக் கேட்காத காலத்தில் ஒருநாள் கதை சொல்ல பாக்யராஜ் வந்தார். கதை ஆரம்பித்திலிருந்து இறுதிவரை கதையைக் கேட்டு சிரித்துச் சிரித்து வயிறெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். முதல் பட இயக்குநர் தானே என கதையைக் கேட்காமல் இருக்கக் கூடாது என. அன்றிரிலிருந்து அறிமுக இயக்குநர்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்தேன். இந்தப் பாடத்தை நான் பாக்யராஜிடமிருந்தே கற்றுக்கொண்டேன்” எனக் கூறியிருந்தார். இதுவும் தற்போது கவனம் பெற்று வருகிறது.

Music composer Ilaiyaraaja spoke about what he had learned from director Bhagyaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.