பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது கோத்தகிரி ரங்கசாமி மலையில் பூத்துக் குலுங்குவதால் மலைப் பகுதி இந்தப் பூக்களின் ஊதா நிறத்தால் ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் பல சிறப்புகளில் ஒன்றாக விளங்குகிறது குறிஞ்சி மலர்கள். மணி வடிவில் ஊதா நிறத்திலான குறிஞ்சி மலர்கள் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான மலைகளில் இயற்கையாகவே வளர்ந்து காணப்படும் தாவரம் ஆகும். ஸ்ட்ரோ பிலாந்தஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்தத் தாவரம் ஓராண்டு இடைவெளி முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக் கூடியது. ஆசியக் கண்டத்தில் காணப்படும் 150 வகை குறிஞ்சி மலர் வகைகளும் இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 30 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன. தற்போது கோத்தகிரியை அடுத்த ரங்கசாமி மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாகக் காட்சி அளிக்கின்றன. இந்த மலர்களில் தேன் அதிகமாக இருப்பதால் அதை தேனீக்கள் சேகரிக்கத் தொடங்கி உள்ளன. பழங்குடியினரான இருளர், குரும்பர் இன மக்கள் தேன் கூட்டிலிருந்து தேன் சேகரிப்பில் ஈடுபடுவர்.
உதகையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த மலைப் பகுதியை அடையலாம். இதற்கு வனத் துறை அனுமதி பெற வேண்டும். தற்போது பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கக் கூடிய வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





