தான் எழுதியதில் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த வசனம் எது தெரியுமா? 

பரபரப்பான அரசியல்வாதியாக இருந்தாலும் அதே நேரத்திலும் திரைத்துறையிலும் அதே அளவு ஈடுபாட்டுடன் கருணாநிதி இயங்கி வந்தார்.
தான் எழுதியதில் கருணாநிதிக்கு மிகவும் பிடித்த வசனம் எது தெரியுமா? 
Published on
Updated on
1 min read

சென்னை: பரபரப்பான அரசியல்வாதியாக இருந்தாலும் அதே நேரத்திலும் திரைத்துறையிலும் அதே அளவு ஈடுபாட்டுடன் கருணாநிதி இயங்கி வந்தார்.

1946-ல் `ராஜகுமாரி' என்னும் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதிலிருந்து கருணாநிதியின் திரைப்பயணம் தொடங்குகிறது. 1950-ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1952-ல் சிவாஜி கணேசன் அறிமுகமான `பராசக்தி' திரைப்படம் தமிழ்த்திரையுலகை கருணாநிதியை வியப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்படத்தில் சமூக அவலங்களை சாடும் நோக்கில்   இடம்பெற்ற கூர்மையான வசனங்கள் பட்டிதொட்டியெல்லாம் தீயாக பரவியது எனலாம். 

`மந்திரி குமாரி', `மணமகள்', `பூம்புகார்', `மனோகரா', `திரும்பிப்பார்', `மருதநாட்டு இளவரசி',  `பணம்', `நாம்', `மலைக்கள்ளன்',  `ராஜா ராணி', `ரங்கோன் ராதா', `புதையல் என 40-க்கும் மேற்பட்ட படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். கருணாநிதி எழுதிய 'பொன்னர் சங்கர்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டது.  

இவ்வாறு 62 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் கருணாநிதிக்கு, தான் எழுதிய வசனங்களில்  கருணாநிதிக்கு மிகவும் பிடித்த வசனம் பராசக்தி படத்தில் இடம்பெற்ற 'மனசாட்சி உறங்கும்  சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது என்னும் வசனமாகும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com