அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கு வரும் 6-ஆம் தேதி பதலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2018, 6:49 am

DIN

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22-ஆம் தேதி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இதையடுத்து, அகில இந்திய வழக்குரைஞர் சங்க பொதுச்செயலர் என்.முத்து அமுதநாதன், "முறையான அனுமதி பெறாமல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச செயலர், காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஆகியோர் கொலை வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மே 30-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தகுமார், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார். 

இந்த 2 வழக்குகளும் நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், எதற்காக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதற்கு தமிழக அரசு வரும் 6-ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.