காலா படத்துக்கு அதிகக் கட்டணம்: அன்புமணி கண்டனம்
காலா திரைப்பட நுழைவுச் சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


காலா திரைப்பட நுழைவுச் சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், அந்தப் படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. முதல் இரு நாள்களுக்கு ஒரு சீட்டுக்கு ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
காலா திரைப்படத்தைப் பொருத்தவரை அதிகாரப்பூர்வமாகவே ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட அதிகக் கட்டணம் எனப்படும் நிலையில், இதைவிட கள்ளச் சந்தையில் 10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.
கூடுதல் கட்டணம் கொடுத்து காலா படத்தைப் பார்க்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் உடனடியாக அறிவுறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்தத் திரையரங்குகளில் காலா திரையிடப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் ரஜினிகாந்த் முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...