திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் ஒத்தி வைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த மூவர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 

News image
Updated On :5 ஜூன் 2018, 8:12 pm

DIN

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த மூவர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 
முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை (ஜூன் 7) மத்திய அரசின் நீர் வளத்துறைச் செயலாளர் குல்சன்ராஜ் தலைமையில் தலைமை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தனர். அதே நாளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், கேரளத்தில் முழு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். 
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வேலை நிறுத்தம் அறிவித்த நாளில் அணையில் ஆய்வு நடத்தினால் சிக்கல் எழ வாய்ப்பு உள்ளதாக துணைக் குழுவில் இடம் பெற்றிருந்த கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த முல்லை பெரியாறு அணை ஆய்வுப் பணிகள் ஜூன் 21இல் நடைபெறும் என தலைமை கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. 
அதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கட்சியினரும் வியாழக்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்த முழுவேலை நிறுத்த போராட்டத்தை ஜூன் 30 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.