ராமேசுவரம் கோயிலில் தேசிய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஆய்வு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
Updated on
1 min read

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் புனித தலமாகவும், இந்தியாவில் உள்ள 12 ஜோதி லிங்க கோயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோயிலில் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. 
இதனையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கோயிலுக்கு ஆயுதம் தாக்கிய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோயிலுக்குள் செல்லிடப்பேசி, கைப் பைகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்பே கோயிலுக்குள் செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். கோயிலில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். 
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு படை மேஜர் ஜெகநாதன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாக அலுவலகத்தில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி, உதவி பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து, கோயிலுக்குள் உள்ள அனைத்து பகுதிகளையும் அக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் கோயிலை ஒட்டி உள்ள விடுதிகளையும் கோயில் கோட்டைச் சுவர் மீது இணைக்கப்பட்டுள்ள விடுதிகளையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு குறித்து உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com