கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: ஒருவர் கல்லால் அடித்துக் கொலை 

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில்,கைதி ஒருவர் : கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல்: ஒருவர் கல்லால் அடித்துக் கொலை 
Updated on
1 min read

கோயம்புத்தூர்: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில்,கைதி ஒருவர் : கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

கோவை மத்திய சிறையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அடிதடி மோதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள விஜய் மற்றும் ரமேஷ் ஆகிய இரு கைதிகளும் அடக்கம்.

செவ்வாய் மதியம் உணவு உண்ணும் சமயத்தில் கைதிகளிடையே சிறு சண்டை மூண்டுள்ளது. அது பின்னர் பெரிதாக மாறி கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இதில் விஜய் சக கைதியான ரமேஷை கல்லால் பலமாகத் தாக்கினார். இதில் பலத்த அடிபட்ட ரமேஷ் உயிருக்கு போராடினார்.

உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், வழியிலேயே பரிதாபமாக உயிரிழநதார். தற்பொழுது  அங்கு கூடுதலாக  போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com