எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மூன்று மாவட்ட ஆட்சியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருதுகள்: முதல்வர் வழங்கினார்

திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள், விஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச்

News image
Updated On :5 ஜூன் 2018, 8:18 pm

DIN

திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்கள், விஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயலாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
2017 -ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகள் மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன. 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆகியோருக்கு பசுமை விருதுகள் அளிக்கப்பட்டன.
தனியாருக்கு விருதுகள்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கடலூர் மாவட்டம் ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். தமிழ்நாடு பவர் கம்பெனி, திருவள்ளூர் யுனைடெட் ப்ரூவரிஸ், நாமக்கல் சேஷசாயி பேப்பர் அண்ட் போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
இதேபோன்று, கல்வி நிறுவனங்கள் பிரிவில் வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சீனிவாசன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.