திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து குழாய் பதிக்கும் பணிகள் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி, முக்குளத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் வெள்ளக்குடியில் தொடங்கி அடியக்கமங்கலம் வரை பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விளை நிலங்களில் பதிக்கப்படும் குழாய்களில் கசிவு ஏற்படும்போது விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, குழாய் பதிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், முக்குளத்து பகுதியிலும் விளை நிலங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, குழாய் பதிக்கும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை பணியை தடுத்து நிறுத்திய அவர்கள், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து குழாய் பதிக்கும் பணியை நிறுத்திய ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










