/

ஏ.டி.எம். பண மோசடி வழக்கு: என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது

ஏ.டி.எம். பண மோசடி வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யாவை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

ஏ.டி.எம். பண மோசடி வழக்கில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யாவை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதுவையில் பலரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடு போனது. இந்தச் சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டன.
வழக்கின் முதல்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, புதுவை பல்கலைக்கழக ஊழியர் பாலாஜி, மருத்துவர் விவேக் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோருக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
மேலும், அவர்களுக்கு உதவியாக இருந்த 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். சந்துருஜி, சத்யாவை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சத்யாவை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மூலம் சந்துருஜி இருக்கும் இடத்தை அறிய போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.