கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியிடம் குரல் மாதிரி பரிசோதனையை மதுரை சிறையில் எடுத்து கொள்ளலாம் என, சிபிசிஐடி போலீஸாருக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.
பாலியல் பேர விவகாரத்தில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியை, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். ஏற்கெனவே, நிர்மலாதேவியின் குரல் மாதிரி பரிசோதனையை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறையில் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கருப்பையா புதன்கிழமை மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, மதுரை மத்திய சிறையில் வைத்து நிர்மலாதேவியிடம் குரல் மாதிரி பரிசோதனையை எடுத்து கொள்ள அனுமதி வழங்கினார். இது சாத்தியமில்லை என கருதினால் மேல்முறையீடோ, மறுபரிசீலனை செய்யவோ மீண்டும் மனுதாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவலை வரும் 21 -ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவியை போலீஸார் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



