சென்னை அருகே நடுக்கடலில் 9 தமிழக மீனவர்கள் தத்தளிப்பு 

சென்னை அருகே நடுக்கடலில் 9 தமிழக மீனவர்கள் தத்தளிப்பு 

சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்து வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க கடலோர காவல் படை விரைந்துள்ளது 
Published on

சென்னை: சென்னை அருகே நடுக்கடலில் தத்தளித்து வரும் 9 தமிழக மீனவர்களை மீட்க கடலோர காவல் படை விரைந்துள்ளது 

சென்னை கடற்கரையிலிருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் 9 பேர் தத்தளித்து வரும் தகவல் கடலோர காவல்படைக்கு தெரிய வந்தது.

அவர்கள் அனுப்பிய அவசர செய்தியினைத் தொடர்ந்தே இந்த தகவலானது கடலோர காவல்படை கவனத்திற்கு வந்துள்ளது.

அதில் அவர்கள் பயணிக்கும் படகின் எஞ்சின் அறையில் அதிக அளவு நீர் புகுந்துவிட்டதாக அந்த மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படை தற்பொழுது ஈடுபட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com