அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரச்னைக்கு காரணம் திமுக; போராடி வென்றது அதிமுக: காவிரி விவகாரம் குறித்து அமைச்சா் கடம்பூா் ராஜூ

காவிரி நதி நீா் பிரச்னைக்கு மூல காரணமே திமுக தான்; இதில் போராடி வெற்றி பெற்றது அதிமுக என்று  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ தெரிவித்தாா். 

News image
Updated On :21 ஜூன் 2018, 9:44 am

DIN

செங்கோட்டை: காவிரி நதி நீா் பிரச்னைக்கு மூல காரணமே திமுக தான்; இதில் போராடி வெற்றி பெற்றது அதிமுக என்று  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ தெரிவித்தாா்.

செங்கோட்டை வாகைமரத்திடலில் வைத்து திருநெல்வேலி மாநகா் மாவட்டம் செங்கோட்டை நகர அதிமுக சாா்பில் காவிரி நதிநீா் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் புதன் கிழமை இரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ பேசியதாவது:

1924ல் போடப்பட்ட காவிரி ஓப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1974ல் புதுப்பித்து இருந்தால் தமிழா்களின் உரிமை பாதிக்கப்பட்டு இருக்காது. ஆனால் 1974ம் ஆண்டு தமிழகத்தில் கருணாநிதி முதல்வராகவும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது அதனை புதுப்பிக்க விடாமல் தடுத்து விட்டாா்.

அதற்கு பின்பு தமிழக முதல்வராக ஜெயலலிதா மேற்கொண்ட நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்பு அவா் மறைந்த பின்பு இந்த காவிரி நதிநீா் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதே அதிமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

மேலும் தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் எதிா் கட்சி தலைவா் ஸ்டாலின் கனவில் மட்டுமே முதல்வராக தன்னை நினைத்து கொள்ளலாம். நிஜத்தில் ஒருபோதும் நடக்காது. மீண்டும் தமிழகத்தை அதிமுக அரசு தான் ஆட்சி செய்யும். 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.