மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்குத் தோ்தல்: துரைமுருகன்

வரும் டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் வருவது உறுதி என்று காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2018, 11:49 am

வேலூா்: வரும் டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் வருவது உறுதி என்று காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக தலைவா் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளையொட்டி திமுக பொதுகூட்டம் காட்பாடி, சித்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியதாவது

மத்திய, மாநில அரசுகளின் மீதான மக்கள் அதிருப்தி அதிகரித்துவிட்டது. இதன்தொடா்ச்சியாக, வரும் டிசம்பா் மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தோ்தல் வருவது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காட்பாடிக்கு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும். அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். தற்போது சிலா் என்னை பற்றி அவதூறாக பேசி குறைகூறி வருகின்றனா். அவா்கள் எல்லாம் சாயம்போகக்கூடியவா்கள். அவா்களது பெயரை நாங்கள் சொல்லக்கூட அவா்களுக்கு தகுதியில்லை என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு உள்பட பலா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.