பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

திருத்தணியில் 107 டிகிரி வெயில்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.

Updated On :27 ஜூன் 2018, 4:26 am IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 107 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ மழை பதிவானது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மைலாடி, இரணியல், நீலகிரி மாவட்டம் குந்தாபாலம், விழுப்புரம் மாவட்டம் மைலம் ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்.
திருத்தணியில் 107 டிகிரி வெயில்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக திருத்தணியில் 107 டிகிரி வெப்பநிலை பதிவானது. நாகை, தூத்துக்குடியில் தலா 102 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமானநிலையம், வேலூரில் தலா 100 டிகிரியும் 
திருச்சி, பரங்கிபேட்டை, கடலூரில் தலா 99 டிகிரியும் வெயில் பதிவானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.