காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சென்னை-கூடூர் பிரிவில் பொறியியல் பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை-கூடூர் பிரிவில், கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில்

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

சென்னை-கூடூர் பிரிவில், கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் பொறியியல் பணி நடைபெறுவதையொட்டி, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29, 30-தேதிகளில் பகுதி ரத்தாகும் ரயில்கள்: 
மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு காலை 6.40, 9.00, 10.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் மூர்மார்க்கெட் காம்ப்ளக்சில் இருந்து பொன்னேரி வரை மட்டும் இயக்கப்படும்.
மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு காலை 7, 8.15, 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-மீஞ்சூர் வரை மட்டும் இயக்கப்படும்
மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-சூலூர்பேட்டைக்கு காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பொன்னேரி-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து பொன்னேரி வரை மட்டும் இயக்கப்படும். 
கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 8.25, 9.50, 10.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மட்டும் இயக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி-வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மீஞ்சூர் முதல் வேளச்சேரி வரை மட்டும் இயக்கப்படும்.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மீஞ்சூரில் இருந்து மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மட்டும் இயக்கப்படும்.
கும்மிடிப்பூண்டி-மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மீஞ்சூரில் இருந்து மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மட்டும் இயக்கப்படும்.
சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு முற்பகல் 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூலூர்பேட்டை-பொன்னேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மட்டும் இயக்கப்படும். இது தவிர சென்ட்ரல் வரும் இரண்டு பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்படும். 
இது தவிர சென்ட்ரல் வரும் இரண்டு பயணிகள் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.