திராவிட இயக்க தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்: மு.க. ஸ்டாலின்
திராவிட இயக்க தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திராவிட இயக்க தலைவர்களின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
என்னுடைய பிறந்தநாள் செய்தியை விரிவான கடிதமாக ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இன்றைக்கு இந்தியாவில் ஒரு மதவாத அடிப்படையிலான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற பாஜக, அதற்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்ட, நாம் அனைவரும் நாட்டின் நலன் கருதி, கட்சி பேதமில்லாமல் ஒருங்கிணைந்து, எதிர்த்துப் போரிட்டு, இந்த திராவிட மண்ணில் சமூகநீதியை உருவாக்கித் தந்திருக்கின்ற திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் ஆகியோரின் கனவுகளை நனவாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
அதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையிலும் இருக்கின்ற எல்லா அமைப்புகளிலும் உள்ள எல்லா தோழர்களும், நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து மக்களிடத்தில் தெருமுனை மற்றும் திண்ணைப் பிரசாரங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதிகளிலும் படிப்பகங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை என்னுடைய பிறந்தநாள் செய்தியாக மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
திராவிட இயக்க தலைவர்களின் எத்தனையோ கனவுகள் நிறைவேறியிருந்தாலும், இன்னும் பல கனவுகள் நிறைவேற வேண்டியிருக்கின்றன. அவற்றை எல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...