மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் சற்று கடினம்: மாணவர்கள் கவலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள்....

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

DIN

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வினை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழகம், புதுச்சேரியில் 2017-18-ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவதாக இன்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது. 

இன்று எழுதிய மொழிப்பாடத்தேர்வின் முதல் தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்வில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் வழக்கமாகப் பாடப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஆனால், இந்தாண்டு அந்த கேள்விப் பட்டியலில் இல்லாது, பாடத்துக்குள் இருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் விடையளிக்க சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.