பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டிருக்கும் சூடு சொரணையற்ற கட்சியின் ஆட்சி: கனல் கக்கிய ஸ்டாலின்! 

பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டிருக்கும் சூடு சொரணையற்ற கட்சியின் ஆட்சி இது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டிருக்கும் சூடு சொரணையற்ற கட்சியின் ஆட்சி: கனல் கக்கிய ஸ்டாலின்! 
Published on
Updated on
1 min read

சென்னை: பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டிருக்கும் சூடு சொரணையற்ற கட்சியின் ஆட்சி இது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வி.ஹெச்.பி அமைப்பின் ராமராஜ்ய  ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி செவ்வாயன்று விளக்கமளித்தார். ஆனால அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சாபாநாயகரின் உத்தரவின்படி அவைக் காவலர்கள் மூலம் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் பின்னர் காமராஜர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பபொழுது அவர்கள் பெரியார் அண்ணா பிறந்த மண்ணில் மதவெறியைத் தூண்டாதே! மதவெறிக்குத் துணை போகும் மத்திய மாநில அரசுகள் ராஜிநாமா செய்யய வேண்டும்! என்று கோஷமிட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த சூழ்நிலையில் இதற்கு அனுமதி அளித்தது தவறு. இந்த குதிரை பேர அரசு பாஜகவுக்கு துதி பாடுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. அதனை முதல்வரின் அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. அவ்வாறு அறிக்கை அளிப்பது அவரின் உரிமை என்றால் இதனை எதிர்த்து நிர்ப்பது எனது உரிமை.

ஐந்து மாநிலங்கள் இந்த யாத்திரைக்கு அனுமதி அளித்திருப்பது தொடர்பான வேறு ஒரு கேள்விக்கு, 'அங்கெல்லாம் பெரியார் பிறக்கவில்லை; அண்ணா பிறக்கவில்லை. இத்தகைய விசயங்களை எதிர்த்து நிற்பதை அவர் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். அதே சமயம் பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டிருக்கும் சூடு சொரணையற்ற கட்சியின் ஆட்சி இது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.         

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று ஹெச்.ராஜா பேசிய பொழுது அவரைக் கைது செய்யாதது தவறு. அதனால்தான் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com