மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

குரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு: சென்னைப் பெண் ஒருவர் மரணம்! 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னைப் பெண் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி  பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 

News image
Updated On :26 மார்ச் 2018, 2:37 pm

DIN

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சென்னைப் பெண் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி  பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி அன்று காட்டுத்தீ பற்றிக் கொண்டது. இதில் சென்னை மற்றும் ஈரோடு பகுதிகளில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர்.

பலத்த போராட்டத்திற்குப் பிறகு இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தவர்கள் மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனன்றி 11 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இந்த நிலையில் வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த பார்கவி (26) சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து  குரங்கணி காட்டுத் தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.