உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை! 

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் பூட்டை உடைத்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 6:05 pm IST

சென்னை: பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் பூட்டை உடைத்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர்களுக்கு பொன்குமார், நாகராஜ் ஆகிய மகன்களும், கிரகலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கிரகலட்சுமி நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியாவார்.

இவருக்கும் நடிகர் பிரசாந்த்க்கும் 2005-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு. ஆனால் தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றம் சாட்டி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பிரசாந்த் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கின் முடிவில் அவர்களது திருமணம் செல்லாது என்று நீதின்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டிலும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, பிரசாத்துக்கு  விவாகரத்து வழங்கப்பட்டது.

இந்நிலையில் கிரகலட்சுமியின் மாம்பலம் வீட்டில் செவ்வாயன்று 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் இந்த துணிகர செயலை நிகழ்த்தியுள்ளனர். தற்பொழுது இது குறித்து மாம்பலம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.