இயந்திரக் கோளாறு காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் விமானம் வியாழக்கிழமை 5 மணிநேரம் தாமதமாக சென்னை சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் சென்னை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 74 பயணிகள் சென்னை செல்ல இருந்தனர்.
இந்நிலையில், இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நிறுத்திவைக்கப்பட்டது. அதில் செல்ல இருந்த பயணிகள் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
5 மணி நேரத்திற்கு பின்னர் இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 12.40 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சுமார் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?

அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்ற நம்பிக்கையால் சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

மகளிர் இடஒதுக்கீடு மசோவை ஆதரிக்கிறோம்; ஆனால்...: கார்கே
நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

