சென்னை: கர்ப்பிணியாக நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பெண்ணால், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை கடத்தல் கும்பலை சென்னையில் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஒரு பெண் பச்சிளம் குழந்தையை விலைக்கு வாங்கியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது.
அதாவது, யோகேஷ் குமார் - பத்மினி தம்பதிக்கு கடந்த 2016ல் திருமணமானது. திருமணமான 2 மாதத்தில் பத்மினி கர்ப்பமாக இருப்பதாக, கணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார். அவரது மருத்துவ அறிக்கையில், கருப்பையில் கட்டி இருப்பதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், அதனை மறைத்து கருவுற்றிருப்பதாக பத்மினி ஏமாற்றியுள்ளார்.
பிரசவத்துக்காக எழும்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பத்மினி சென்றுள்ளார். பிறகு, குழந்தை பிறந்ததாகக் கூறி கணவர் குடும்பத்திடம் ஒரு குழந்தையையும் காண்பித்துள்ளார். இதில் கணவர் குடும்பத்துக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு, பத்மினி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து ரூ.2 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணை தீவிரம் பிடித்தது. அப்போது, குழந்தைகள் நல வாரியத்தின் உதவியோடு, காஸியாபாத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்தோம். காஸியாபாத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே தம்பதி 2017 ஜனவரி மற்றும் 2017 ஜூன் மாதத்தில் தங்களது குழந்தையை தத்துக் கொடுக்க இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒரே தம்பதி எப்படி 7 மாத இடைவெளிக்குள் இரண்டு குழந்தைகளை தத்துக் கொடுக்க முன்வர முடியும்.
தத்துக் கொடுக்க முன்வருவதாக பதிவு செய்திருந்த கோமல் வெர்மா (34), ரிக்கி வெர்மா (40) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தில்லியைச் சேர்ந்த புரோக்கர்கள் என்பதும், அவர்களிடம் அமித் ஷர்மா - ஜெயா ஷர்மா தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த 3வது குழந்தையை விற்பனை செய்ய முன் வந்ததை அடுத்து அவர்கள் குழந்தையை விற்க சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் பிறந்த பச்சிளம் குழந்தையை தத்தெடுக்க தான் தயாராக இருப்பதாக இணையதளம் ஒன்றில் பத்மினி பதிவு செய்திருப்பதைப் பார்த்த கோமல் வெர்மா, பத்மினியை தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு குழந்தையை விற்றுள்ளார்.
2017ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாக பத்மினி கணவருக்கு தொலைபேசி வாயிலாகக் கூறியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு வருவதற்குள் பத்மினி குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
குழந்தையின் தொப்புள் கொடி காய்ந்திருந்ததாலும், குழந்தை பிறந்ததற்கான எந்த உடல்நல மாற்றமும் பத்மினியிடம் இல்லை என்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மருத்துவரிடம் பத்மினியை அழைத்துச் சென்று, அவருக்கு பிரசவம் ஆனாதா என்பதை மருத்துவரிடம் பரிசோதிக்குமாறு கூறியுள்ளனர். அதில், அவர் கர்ப்பம் தரிக்கவே இல்லை என்பதை மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து உடனடியாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பத்மினி மீது புகார் அளிக்கப்பட்டு, அது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் வாடிக்கையாளர்போல, தங்களுக்கு குழந்தை தேவைப்படுவதாக பேசினர். இதைக் கேட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளை கடத்தி விற்பது தொடர்பாக பேச திங்கள்கிழமை சென்னை வந்தனர். அப்போது போலீஸார், அவர்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களை கையும்களவுமாக கைது செய்தனர்.
போலீஸார் விசாரணையில், அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்த ரிக்கி வர்மா (43), அவரது மனைவி கோமல் (39), அஜய்சர்மா (41), ஜெயா (35) என்பது தெரிய வந்தது. இவர்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், குழந்தைகள் நல மையங்கள், கோயில்கள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை திருடி விற்பது தெரிய வந்தது. அவர்களிடம் மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


