மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,970 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் உப நதியான பாலாற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து 512 கனஅடியிலிருந்து 1,449 கனஅடியாக அதிகரித்தது. இது புதன்கிழமை காலை நொடிக்கு 1,970 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 35.03 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 9.67 டி.எம்.சி.யாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ஆர்ஜே பாலாஜி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!

2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டம்! ஜார்க்கண்ட் அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை!

ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK


