தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை தருமபுரி வழியாக காரில் திருப்பதிக்குச் சென்றார். அப்போது, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அக் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு, குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலத்திலிருந்து திருமலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். தருமபுரி மாவட்டம் வழியாகச் செல்லும் எனக்கு, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், மாவட்ட மக்களே திரண்டு வரவேற்பு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் அன்பின் காரணமாக நடக்கிறது. இந்த அன்பின் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. தமிழக மக்களையும், கட்சித் தொண்டர்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்றார். முன்னதாக, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


