மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளிக் கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை: கே.ஏ. செங்கோட்டையன் 

பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை; திட்டமிட்டபடி ஜூன் 1 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

News image
Updated On :14 மே 2018, 8:11 pm

பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை; திட்டமிட்டபடி ஜூன் 1 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் மையங்கள் அமைக்க வேண்டும் என சிபிஎஸ்இ தமிழக அரசிடம் கேட்டிருந்தால் 500 மையங்களாக இருந்தாலும், அவற்றை உடனடியாக ஏற்பாடு செய்திருப்போம். இதன் மூலம் தமிழக மாணவர்கள் சொந்த மாநிலத்திலேயே நீட் தேர்வு எழுதியிருப்பார்கள். இருப்பினும் வரும் ஆண்டுகளில் நீட் உள்ளிட்ட எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை தமிழகத்திலேயே எழுதுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை நடத்தும்போது அதை நமது மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசின் செலவில் 9 இடங்களில் 3,145 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. 
ஜூன் 1 -இல் பள்ளிகள் திறப்பு: வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கடந்த ஏப்ரல் 20 -ஆம் தேதி முதலே தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்.
பிழையில்லா பாடநூல்கள்: வழக்கமாக புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூல்களை வடிவமைத்து அதை வெளிக்கொண்டு வர இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பள்ளிக் கல்வித்துறையின் திட்டமிட்ட செயல்பாடுகளால் இந்தப் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாத நிலையில், அவற்றில் சில பிழைகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் நலன் கருதி விரைவாக பாடத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஓரிரு பிழைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளன. அவற்றைத் திருத்தி பிழையில்லாத புதிய பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அமைச்சர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.