காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-இல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-ஆம் தேதி மண்ணடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகிக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு அளித்துள்ள வரைவுத் திட்டம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். இந்தக் கூட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதிமுகவினர் கூட பங்கேற்கலாம். தமிழகம் அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறது. அதை மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் கடமை.
மக்களைச் சந்திக்கிறோம்: "காவிரிக்காக தமிழகத்தின் குரல்' என்ற தலைப்பில் மக்களைச் சந்திக்கவும் உள்ளோம். கர்நாடக முதல்வரைச் சந்தித்து முறையிடவும் தயாராக இருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததோடு பிரச்னை முடிந்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. காவிரி நீரைப் பெறவும், போராட வேண்டியுள்ளது என்றார்.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ்ஸின் பிரசாரம் ஒத்திவைப்பு! பிரதமருடன் இன்று சாலை வலம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

