போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

சிபிஐ விசாரணை கோரி மனு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை அரசுத் தரப்பு உறுதி செய்ய வேண்டும். 
அப்பகுதியில் இணையதள சேவையை முடக்கி காவல் துறை பொதுமக்கள் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இணையதள சேவையை முடக்கக் கூடாது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களைக் கண்டறிய மாவட்ட நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும். 
எனவே இதுதொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளேன். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டார். 
இதனையடுத்து நீதிபதி, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 
இதனையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத் , இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களுக்கு தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் காயமடைந்த போலீஸாருக்கு பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து மனுவை பரிசீலித்த நீதிபதி, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதால், தலைமை நீதிபதியின் அனுமதி பெற்றால் மட்டுமே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என மனுதாரரிடம் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்த வேண்டும் என வழக்குரைஞர் சூர்யபிரகாசம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜிக்கு கோரிக்கை விடுத்தார். 
இதன்படி வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது தொடர்பாக முறையீடு செய்ய வழக்குரைஞர் சூர்யபிரகாசத்துக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.