தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை சபாநாயகர் தனபால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து வைத்தார்.

Updated On :

சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியை இன்று சபாநாயகர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றனர். 

76,821 சதுர அடி, 10 தளங்கள் மற்றும் தலா 593 சதுர அடி பரப்பில் 68 அறைகள் கொண்ட இந்த விடுதியானது 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் 250 பேர் வரை அமர்ந்து மாநாட்டுக் கூடம் நடைபெறும் வகையிலும் மேல் தளத்தில் இடம் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த விடுதியில் நாள் ஒன்றுக்கு தலா 300 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த விடுதியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகபட்சம் 5 நாட்கள் வரை அங்கு தங்கலாம். 

இந்த விடுதியில் தங்கிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதிவுகளை சட்டப்பேரவை செயலக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

இந்த கட்டிடத்துக்கு 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.