இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிந்தட்டிக் ஃபுளோரோபாலிமர் உள்ளிட்ட ரசாயனப்பூச்சு பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வகை ரசாயனங்கள் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் உள்பூச்சாக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை மைனஸ் 40 முதல் 260 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை தாங்கும் என்பதால், பல்வேறு பொருள்களில் குளிர் மற்றும் வெப்பத்தை தாங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரசாயனப் பொருள்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்க சந்தையில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இந்த ரசாயனங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அப்பொருள்களின் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் இது தொடர்பாக ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் இந்தியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனப்பூச்சு பொருள்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதிக்க வேண்டியது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில், மிகை இறக்குமதி தடுப்பு வரியின் கீழ் 22.78 சதவீதம் வரி விதிக்க முடியும். அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு ரசாயனப்பூச்சு பொருள்களை ஏற்றுமதி செய்வது முற்றிலுமாக தடைபட்டு விடும் அபாயம் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணி: மேயா் ஆய்வு
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
உண்டியல் காணிக்கை திருட்டு
புகையிலைப் பொருள்கள், பைக் பறிமுதல்: வியாபாரி கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


