சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நவ.8 ஆம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி நவ. 8 ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீடு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரிப்பர். நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.தாரணி அடங்கிய இரண்டாம் அமர்வு ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு, வருமான வரித்துறை தொடர்பான மேல்முறையீடு வழக்குகள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரிப்பர்.
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அடங்கிய மூன்றாம் அமர்வு வரிச்சட்டம் தொடர்பான வழக்குகள், கல்வி, கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சட்டம், விற்பனை வரி, கலால் மற்றும் சுங்கம், சிவில், கனிமவளம் தொடர்பான மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பர்.
நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், 2007 முதல் 2010 வரையிலான அனைத்து நிலை முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜெ.நிஷாபானு 2012 ஆம் ஆண்டு முதலான சிவில் மேல்முறையீடு மனுக்களையும், 2017 ஆம் ஆண்டு முதலான சிவில் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பார். நீதிபதி டி.ரவீந்திரன் 2015 ஆம் ஆண்டு முதலான இரண்டாம் மேல்முறையீடு மனுக்களையும், சிவில் இரண்டாம் மேல்முறையீடு மனுக்களையும், 2012 வரையிலான சிவில் சீராய்வு மனுக்களையும் விசாரிப்பார்.
நீதிபதி பி.வேல்முருகன் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகான குற்றவியல் மேல்முறையீடு மனுக்கள், குற்றவியல் சீராய்வு மனுக்கள், சிபிஐ, லஞ்ச ஒழிப்பு தொடர்பான வழக்குகளை (ஜாமீன், முன்ஜாமீன் தவிர) விசாரிப்பார். நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் தொடர்பான வழக்குகள், 2015 ஆம் ஆண்டு முதலான அரசுப் பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிப்பார்.
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்கா ராமன் 2011 ஆம் ஆண்டு வரையிலான குற்றவியல் மேல்முறையீடு, குற்றவியல் சீராய்வு மனுக்களை விசாரிப்பார். நீதிபதி வி.பவானி சுப்பராயன் 2015 ஆம் ஆண்டு முதலான கல்வி, கனிமவளம், தொழிற்சாலைகள், வனத்துறை தொடர்பான ரிட் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா குற்றவியல் மனுக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான குற்றவியல் மேல்முறையீடு மனுக்களை விசாரிப்பார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் 2015 ஆம் ஆண்டு முதலான தொழிலாளர், நகர் நில நிர்வாகம், நில ஆர்ஜிதம், நில சீர்திருத்தம், மோட்டார் வாகனச் சட்டம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, கலால் மற்றும் சுங்கம் தொடர்பான வழக்குகளையும், 2011 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து நிலை ரிட் மனுக்களையும் விசாரிப்பார். நீதிபதி டி.கிருஷ்ணவள்ளி 2006 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து நிலை இரண்டாம் மேல்முறையீடு மனுக்களையும் விசாரிப்பார். நீதிபதி எம்.நிர்மல்குமார் 2016 ஆம் ஆண்டு வரையிலான ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
16 ரன்னில் ரிவிவ் எடுக்க தவறிய ஆப்கானிஸ்தான்..! அரைசதம் கடந்த கே.எல். ராகுல்!

மலையாள நடிகர் சலீம் குமார் மருத்துவமனையில் அனுமதி! வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை!
ஒன்றுகூடிய கரப்பான் பூச்சிகள்! மத்திய அமைச்சர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் போராட்டம்!






