தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசுவதா? டி.டி.வி.தினகரனுக்கு அமைச்சர் கண்டனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசிய அமமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:19 am IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசிய அமமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழக முதல்வர், துணை முதல்வர் தொடங்கி அனைத்து அமைச்சர்களையும் அமமுக துணைப்பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் மரியாதை குறைவாகவும், அடைமொழியிட்டும் அழைத்து தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார். 

மேலும் கடந்த அக்.30 ஆம் தேதி பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் கட்டப்படிருந்க பேனர்களில் முத்துராமலிங்கத்தேவர், ஜெயலலிதா ஆகியோர் படங்களை தனது ஆட்கள் மூலம் சேதப்படுத்திவிட்டு, அந்தப் பழியை பொதுமக்கள் மீது சுமத்தி விட்டார்.

இந்நிலையில் டி.டி.வி.தினகரன் அன்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கட்சியின் நாளேட்டை பேசுவதுபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமரியாதை செய்யும் விதமாக பேசியுள்ளார். இதனை ஜெ. பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.