எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாற வேண்டும்: தருமபுரம் ஆதீனம் தீபாவளி ஆசியுரை

மக்கள் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாறும் நாளாக இறைவனை வேண்டி,

Updated On :6 நவம்பர் 2018, 1:40 am IST


மக்கள் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கி, நல்லவர்களாக மாறும் நாளாக இறைவனை வேண்டி, தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி ஆசியுரை வழங்கியுள்ளார். 
அவர் வழங்கிய ஆசியுரை:
நாட்டில் தர்மத்துக்கு சோதனை வரும் நேரத்தில் எல்லாம் இறைவன் தனது அருட் சக்தியைக் கொண்டு, ஒரு சிருஷ்டியை உருவாக்கி, தர்மத்தை நிலைநாட்டி வருகிறார்.
துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் அவதாரத்தால் அழிந்தவன்தான் நரகாசுரன். கிருஷ்ணரால் தன்அழிவை உணர்ந்த நரகாசுரன் தன் அழிவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இறைவனிடத்தில் விண்ணப்பம் செய்து கொண்டான். அதனடிப்படையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி இந்திய நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய திருவிழாவாக விளங்குகிறது. ஒருவரின் இறப்பில் தீபம் ஏற்றுவது வழக்கம். அவ்வகையில்தான் நரகாசுரன் வதமான நாளாகிய தீபாவளி அன்று தீபம் ஏற்றி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று மட்டும் எண்ணெய்யில் மகா லெட்சுமியும், வெந்நீரில் கங்கையும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். எனவே, விடியற்காலையில் எண்ணெய்த் தேய்த்து நீராடவேண்டும். அதனால்தான் கங்கா ஸ்நானம் ஆச்சா எனக் கேட்பர். 
நரகன் வீழ்ந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தெரிந்த மக்கள், தமக்குள் இருக்கும் தீமையான எண்ணங்களைப் போக்கி நல்லவர்களாக மாறும் நாளாக எண்ணி இறைவனை வழிபட்டு கொண்டாடவேண்டும்.
இந்நாளில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் வாழ, எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் தனது ஆசியுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.