கேரளத்தில் உள்ள குமுளி, வண்டன்மேடு, புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் உள்ள ஏலக்காய் ஏல விற்பனை நிலையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது.
கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் பெய்த பலத்த மழையால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஏலக்காய் தோட்டங்களில் மழையால் ஏலச் செடிகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் ஏலச் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக ஏலக்காய் ஏல விற்பனை நிலையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது.
ஏலக்காய் வரத்து குறைவால் விற்பனை விலை சீராக உயர்ந்து வருகிறது. இடுக்கி மாவட்டம், புளியமலையில் உள்ள கிரீன் ஹவுஸ் மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஏல விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை மொத்தம் 51,929 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏலக்காய் சராசரி ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.1,250.87-க்கு விற்பனையானது. அதிகபட்ச விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.1,429--ஆக இருந்தது.
ஏலக்காய் விலை உயர்ந்திருந்தாலும், மகசூல் குறைந்துள்ளதால் உற்பத்திச் செலவுக்கு கட்டுப்படியாகாத நிலை உள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

த்ரிஷா கொடுத்த டிராமிசு கேக் ஹைதராபாத்-ல் மட்டும் கிடைக்குமா? என்ன ஸ்பெஷல்?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


