ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை: தொடங்கியது சர்கார் நடவடிக்கை?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

News image
Updated On :8 நவம்பர் 2018, 6:54 am

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் புதனன்று காலை கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , 'சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு செயல்படுவது வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு நல்லதல்ல' என்று தெரிவித்திருந்தார். 

அதேபோல இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு எதிராக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் புதன் மதியம் கருத்து தெரிவித்திருந்தார். 

அதேசமயம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் புதன் மாலை நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், 'சர்க்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை எரிக்கும் படியான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வியாழன் காலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 'திடீர்' ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   

சர்க்கார் படத்திற்கு எதிராக புதனன்று மூன்று தமிழக அமைச்சர்கள் கருத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.